நத்தைஒட்டு தண்ணீர்...
என்ன அவசரமோ?
யாருக்கு தாகமோ?
வேக வேகமாய் ...
மூச்சிரைக்க...
முதுகு வலிக்க...
புல் ,முள்
சுடுமணல்
எத்தனை எத்தனையோத்
தாண்டி –அந்த
ஒற்றையடி பாதைக்கு
வந்து –வழி
கிடைத்த மகிழ்ச்சியில்
நெட்டி முறித்தது
நத்தை.
எதையும் கண்டுகொள்ளாமல்
வந்த வேகத்தில்
அரைத்து சென்றது
ஒற்றை மாட்டு வண்டி...
சக்கரத்தில் ஒட்டியிருந்தது
தண்ணீர் மட்டுமல்ல
நத்தையின் உயிரும் தான்.
- எபி