என் தாய் இன்னும் கர்ப்பிணி தான்...

என் தாய்.

என் போன ஜென்மத்து
தவத்தின்
இந்த ஜென்மத்து
வரம் .

இவளை கடவுளென்று
சொல்லி
அன்னியப்படுதிவிட மாட்டேன்...

கருவறை இருள் தான்
உலகமோ என்று
நினைத்த வேளையில்
“என் கருவறை வானத்தின்
நிலவு நீயடா”
என்றுரைத்தவள் .

இரவின் இருள்
என்னை –என் தாயின்
கருவறைச் சுவரில்
கிறுக்க அழைக்கிறது..

எனக்கு பசிக்கும்
நேரமெல்லாம்
தன் உயிரை
உலையில் போடுவாள்.

உன்னை பிரிக்க
ஆசைப்பட்டால்
இறைவனை –நான்
பாவி என்பேன்.

என் குழந்தை பருவ
தலாட்டினை கேட்டு
இன்னும் என் இதயம்
குரட்டை இட்டு
உறங்குகிறது ...

தன் கருவறையிலிருந்து
இறக்கி வைத்தவள்
என்னை- தன்
இதயக் கருவறையில்
சுமக்கிறாள் .

என் தாய்
இன்னும்
கர்ப்பிணி தான் ...

-எபி

எழுதியவர் : எபி (6-Nov-11, 11:59 pm)
சேர்த்தது : rosebi
பார்வை : 465

மேலே