மனிதனே மாறிவிடு
மனிதனே மாறிவிடு !
கடலுள் கரையும் மண்ணாக அல்ல
மாறாக அந்த அலைகளை - தாங்கும்
கல்லாக மாறிவிடு!!
வாழ்வின் சோதனை அலைகளில்
மோதி மோதி - அதை எதிர்க்கும்
திடமான கல்லாக மாறிவிடு!!
கல்லாகவே மாறமுடியும் என்றல்
உன்னையே ஓர் அழகான சிற்பமாய்
செதுக்கும் சிற்பியாய் உன்னால் மாறமுடியாத?
சிற்பியாய் மாறிவிடு!!
வேதனைகளை வெல்லும் உன்னால்
சாதனை செய்ய முடியாதா?
சாதனையாளனை மாறிவிடு!!
துவண்டது போதும் எழுந்திரு - உன்னால்
முடியும் என்று போராடு
சாதனை அடைந்திடு!
சரித்திரம் படைத்திடு!
மனிதனே மாறிவிடு!