ஒற்றை சொல் மறுப்பு
உன்னை...
முதன்முதலாய் பார்த்தநாள்
இன்றும் பசுமையாய்.
சில நாட்களில்...
என்னை பாராமல் பார்த்த
கண்களின் சந்திப்பு.
பேருந்து பயணங்களில்
என்னை காணாது பரிதவித்து
கண்டவுடன்...
மறைக்கத்தெரியாத
கணநேர மகிழ்ச்சி....
நண்பர்களுடன் பேசுவதுபோல்
ஓரக்கண்ணால்
என்னுடன் சமிக்ஞைகள்...
ஒருமுறை பேருந்தில்
தவறிவிழவிருந்தேன்..
அந்த கணநேர சுதாரிப்பில்
கண்டுகொண்ட உன் ......
பரிதவிப்பும் மகிழ்ச்சியும்
இப்படி எதுவுமே மறைத்ததில்லை..
ஏன் இந்த
விளையாட்டுக்கெல்லாம்
முடிவின் அச்சாரமாய்.....
அன்றொரு நாள்
பலவீனமாய் உதிர்த்தாயே
ஒற்றை சொல் மறுப்பு ....
அது கூட மறுக்கவில்லை
உள்ளுக்குள்.....
என் இருப்பை.