என் (அக்காவின்) மகன்..................!!

உன் செல்லப் புன்னகை
உன் இனிமை நிறைந்த பேச்சு
ரசிக்க வைத்த குறும்பு
ரசனை மிக்க உணர்வு....
வயதிற்கும் மேலான
உன் அறிவு
அனைத்தையும் புரியுமுன் மதிநுட்பம்
எல்லையற்ற அன்பு
பெரியோரை மதிக்குமுன் பன்பு
periyavanaaka நீ
எம்முடன் பேசும்
sotkal
எத்தனையோ குழந்தைகள்
என்ன வாழ்வில் நான்
கண்டேன்
இல்லை உன்போல்
நான் பெறவில்லை ஆயினும்
நீயே என்
முதல்க் குழந்தை.....
என்னை நீ அன்போடு அழைக்கையில்
என் தாய்மையை உணர்ந்தேன்
நீ என்னை உன்
பட்டுக் கரங்களினால்
அணைக்கையில்
நான் இவ்வுலகையே மறந்தேன்
உன் குட்டிப் பாதம் நுகர்கையில்
மழலைப் பேச்சால் நீ
மனத்தைக் கொள்ளை கொள்ளும்
கொள்ளைக் காரனடா
அன்பே
ஆசை நாயகனே
ஆருயிர் கண்ணா
என் கற்பனைகளின் உருவாய் வந்து
எம் குலத்தில் அவதரித்த
செல்வச்சிறப்போ நீ...?
ஏழேழு ஜென்மமும் நீ வேண்டும்
என் அக்காவின் மகனாக
நானுன்னை
கொஞ்சவேண்டும் என் மகனாக.........
என் அன்புக் குழந்தை நீயாக
வரவேண்டும்
தவம் செய்வேன் உனக்காக.........!!