இவர்களில் நான் யார்..................?

அன்றாடம் பார்க்கின்றே
மானிடரின் வகைகள்
இன்னும்தான் புரியவில்லை
அன்புக்காய் சிலர்
அறிவிட்காய் சிலர்
அடிமைகளாய் சிலர்
அடிமைப் படுத்துபவர்களாய் சிலர்
பண்புடன் சிலர்
பன்பற்றவர்களாய் சிலர்
அசுரர்களை சிலர்
அதை ஒழிக்க வந்த
அவதார புருஷர்களாய் சிலர்
மடமைகளை சிலர்
மண்டியிடும் நிலையில் சிலர்
அனாதைகளாய் சிலர்
அதை உருவாக்குபவர்களாய் சிலர்
பிழைக்காய் சிலர்
பிள்ளையை கொல்லவும் விற்கவும் சிலர்
அறியாத நான் தவிக்கின்றேன்
இவர்களில் நான் யாரென்று..........?
என்னை நான் புரிந்துவிடின்
சாதிப்பேன் மனிதமற்ற மனிதரை
இப் பூவுலகில்........................!!




எழுதியவர் : ammu (12-Nov-11, 9:11 am)
பார்வை : 377

மேலே