அவன் என் நண்பன்

கூனி குறுகி நாணி நின்ற போது
நமட்டு நகை புரிந்தான் சுற்றத்தான்
நனை கட்டிபிடித்து நலம் கேட்டான் உட்ற்றநண்பன்!

ஐநிலம் எனை போற்றும்போது,
சுற்றத்தான் புறம் பேசி நின்றன்,
என் நண்பன் எனக்கு உரம் போட்டு நின்றான்!

நாதியற்று நின்ற போதும்
நீதி கேட்டு நின்றான் என் நண்பன்
எனக்காக நீதி கேட்டு நின்றான்!

ஏனெனில்
அவன் என் நண்பன்

எழுதியவர் : yaalshanmugam (12-Nov-11, 5:34 pm)
Tanglish : avan en nanban
பார்வை : 779

மேலே