இன்பம் - 393

பொருட்பால்
..............................
அரசியல்
..............................
கல்வி
..........................................................................................
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
.........................................................................

கவிதையாய் பொருள்
..................................................................................
கற்றதனால் பார்வையற்றோர்
கண்ணிரண்டு பெற்றவராவர்
கல்லாததனால் பார்வையுற்றோர்
கண்ணிருந்தும் புண் பெற்றவராவர்.
=======================================
இன்பம்மென்று முரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்.
========================================

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (14-Nov-11, 9:24 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 256

மேலே