குறும்புத் தங்கை.......!

அபினயமானவள்
அழகிய ராட்சசி
அன்பின் ஆதாரம்
அடங்காக் குறும்புக்காரி
அனைவரையும் ஆட்டுவிக்கும்
அழகிய குலவிளக்காய்.........
அர்த்தம் பல தந்த
அன்னைக்கு இணையான
குட்டி அன்னையிவள்.......
இறைவனிடம் வரம்கேட்டு
இன்பம்தர வந்தவள்.........
ஈடு இணையில்லா
இவளன்பு
இவ்வுலகில் எமக்கில்லை இவளல்லால்
கல்வியிலும் குறைவில்லை
வேண்டுகிறோம் மறுஜென்மம்
இருப்பின் அவளே
என் தங்கையாய் பிறந்துவிட........


எழுதியவர் : அம்மு..... (15-Nov-11, 5:01 pm)
பார்வை : 388

சிறந்த கவிதைகள்

மேலே