வனவிலங்குகள் பொருட்காட்சி

நான் மூன்று வயதாய் இருந்தபோது
மதுரையில் ஒரு புதுமையான பொருட்காட்சி,
வனவிலங்குகள் பொருட்காட்சி;

என் அப்பா என்னைக்
கைபிடித்துக் கூட்டிச் சென்றார்,
உடன் என் தோழி மேரியும் வந்தாள்;

மேரி எனக்கொரு பரிசு
வாங்கித் தருவதாகச் சொன்னாள்,
பொருட்காட்சியிலோ பெருங்கூட்டம்;

நான் பார்த்த வரையில்
ஒரு புலியோ, சிங்கமோ
அங்கே விற்பனைக்கு இல்லை;

அங்கிருந்த பேசும் குரங்கு ஒன்று
எனக்குப் பிடித்துப் போயிற்று,
அதை விலை பேசி வாங்கி ஆயிற்று;

சொன்ன பேச்சைக் கேட்கும் அது
என் கையை விரும்பிப் பிடித்துக் கொண்டது,
அவன் எனக்கு ஒரு நல்ல தோழன்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Nov-11, 2:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 357

மேலே