நிழல்

அன்று மாலை நேரம் சென்னைல சிவன் பார்க் பஸ் ஸ்டாப் பக்கத்துல இருக்குற பக்கவாட்டுல ஒடுக்கனமதிரியான இருக்கும் அந்த பார்க்ல சிமெண்ட் பென்சில ஒரு ஓரமா சாஞ்ச மாதிரி ஒக்காந்து இருந்தார் ராஜன். பலுன் ஒண்ணு அவர் மீது மோதி கிழ் விழுந்தது

சாரி தாத்தா,
பரவல்ல செல்லம்.
என் பேரு ரேஷ்ம lkg படிக்கிற தாத்தா. உங்க பேரு ?
ராஜன்.
நீங்க மட்டும் தனிய வந்திங்களா ? தாத்தா.
ஆமா செல்லம்.
நான் எங்க அம்மா , அப்பா எல்லாரும் வந்து இருக்கோம் அதோ அங்க இருக்காங்க பாரு தாத்தா.
நீங்க எங்க வீட்டுக்கு ஒரு நாள் வாங்க. !
சரிமா வரேன்.
உங்க வீடு எங்க இருக்கு தாத்தா ?
இது தான் என் வீடு செல்லம். அப்படினு அந்த பார்க்கே கை காட்டி சொன்னார் ராஜன்.
அப்படியே நான் தான் உங்க வீட்டு வந்து இருக்கேன் அப்படி சொல்லிகிட்டே கை தவறி விழுந்த அந்த பளுனை எடுக்க ஓடிவிட்டால் ரேஷ்ம.

ஏன் அந்த குழந்தைகிட அப்படி சொன்ன லேசா அந்த சிமெண்ட் பென்சி மேல மாறுபடியும் சாஞ்சி ஒக்காந்துகிட்டார்.

திருவண்ணமலை பக்கத்துல ஆரணி சொந்த ஊர். 30 வருஷத்துக்கு முன்னாடி கே கே நகர் ல இருக்குற ESIC ஹோபிடல கிளெர்க் வேலை போஸ்ட்மென் சொன்னதும் அளவு இல்லாத சந்தோசம் சின்ன வயசுல அப்பாவ தவறவிட்டு ரொம்ப கஷ்ட பட்டு அம்மாதான படிக்கவச்சி எப்போ வேலையும் வந்துச்சி அம்மா கிட்ட சொன்னதும் அழதுட்டாங்க வேலைக்கு போய் சேர்ந்து ஆறு மாசத்துல கல்லியாணம் நல்ல வீடா பார்ந்து சென்னைல அம்மாவ தனியவிடமா சேர்ந்தே இருந்தாங்க அம்மாவுக்கு ரொம்ப வயசு ஆடுச்சி அவங்களா எந்த வேலையும் செய்ய முடியல அழகு மட்டும் இருந்தா போதும் நினச்ச அந்த அடாவடி பொண்ண கட்டிகிட ராஜன் கொஞ்சம் நாள் தான் அமைதியா இருந்தாங்க அம்மாவா சும்மாவே வேலை செய்யலன்னு சண்டை போட்டுகிட்டே இருப்பாள்.
ஒரு நாள் பெரிய சண்டை நடந்து ஒன்னு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும் நீயே முடிவு பண்ணிக்கோ அப்படி சொல்லிட்டால்.
என்ன பண்ணறதுன்னு தெரியாம இருந்தார் ராஜன்
அன்று காஞ்சிபுரத்து கோவில திருவிழா கோவிலுக்கு போலமனு அம்மாவை அழச்சிகிட்டு போனான் ராஜன் கோவில நல்ல குட்டத்துல அம்மா எங்க இரு நான் போய் கல்புரம் வாங்கிட்டு வரணு சொன்னான் ,அம்மாவுக்கு என்ன நடக்க போதுன்னு தெரியும் சரிபா பார்த்து போ அப்படி சொன்னால் திருப்பி திருப்பி பார்த்துகிட்டே ராஜன் வீட்டுக்கு வந்துதான்.

அப்பறம் மனைவிகிட சொல்லி நல்ல பேர் வாங்கிதான் ராஜன். பிறகு ஒரு பையன் பொறந்து அவன் பெரிய ஆளாக வளர்ந்தான் மனைவி இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க பையனுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் கல்யாண நடந்தாது பொண்ணு கொஞ்சம் பெரிய இடம் கல்யாணம் நடந்தான் ஒரு வாரத்துலே ராஜன் குட சண்டை எதுக்கு எடுத்தாலும் சண்டை தான் அன்று அம்மாவுக்கு நடந்ததை நினைச்சி அப்போ அப்போ கண் கலங்கி கொண்டு இருப்பார் ராஜன்.

இன்று காலையில நடந்த சண்டையில ராஜன் இங்கு வந்தார் இத எல்லாம் நினைசிகிடே இருந்த போது பந்து ஒன்னு அவர் மேல விழந்தது
தாத்தா நான் இல்ல
அந்த குமார் தான் போட்டான். அப்படின்னு ரேஷ்ம சொல்லிகிட்டே பக்கத்துல வந்தால்.
தாத்தா நான் போறேன் bye .
ஓகே செல்லம்.
நான் நாளைக்கு வரேன் நீங்க இருப்பீங்களா ?
இருப்பேன் செல்லம்
சரி தாத்தா.

மறுநாள் அந்த குழந்தை அந்த இடத்தில் வந்து பார்த்தது ராஜன் இல்லை.
ஏமாற்றமாக திரும்பி திருப்பி பார்த்துகிட போனால் ரேஷ்ம.

(அவன் நிழல் அவனை விடு போகாது நிழல் மட்டும் அல்ல அவன் பாவங்களும் தான். வினை விதைத்தவன் வினை அறுப்பான்)

எழுதியவர் : வேலு (19-Nov-11, 7:39 pm)
சேர்த்தது : வேலு
Tanglish : nizhal
பார்வை : 856

மேலே