நட்பின் பரிசுக்காக ......

கடல் தாண்டிய தோழி உன்னை
காண மனம் எத்தனித்து ,
சிறைவாடும் பறவைபோல
சிக்கி மனம் சிதைகிறது ,
ஊர் பெயரும் அறியாது
உள்ளுணர்வால் நட்பு கொண்டு !
நட்பு எனும் பரிசாலே
நாளெல்லாம் நடைபோட.
விரைவில் உன்னை காண எண்ணி - நான்
வழியோரம் காத்திருப்பேன் - நீ
நட்பு என்னும் பரிசோடு
நடந்துவரும் நாளை எண்ணி .........