பாரத சமுதாயம்
பட்டினிச் சாவுகள் நிகழும் போதும்
பால் குடிக்கும் ‘கடவுள் சிலைகள்’
ஆபுத்திரரின் அமுத சுரபிகளில்
அள்ள அள்ளக் குறையாமல்
‘கண்ணீர்த் துளிகள்’…
சமதர்மம் பேசிவிட்டு
ஜனநாயகப் புறாவை
சற்று தூக்கலாக நெய் விட்டு
வறுத்து தின்னும்
‘மங்குனி அரசர்கள்’
சங்கம் என்ற சொல்லே
தமிழ்ச் சொல் இல்லை
என்ற பின்னும் சங்கத்தமிழே!
என்பதைப் போல் அழைக்கபடும்
‘ஜாதிப் பெயர்கள்’
கட்டண வழியில் சென்று
சிறப்பு தரிசனம் செய்தாலும்
கண்டுகொள்ளாத
‘கடவுளர்கள்'
இவை எல்லாவற்றையும்
தாங்கி நிற்கும் எங்கள்
பாரத சமுதாயம் வாழ்கவே !
வாழ்கவே !..