அப்பா

அம்மா இல்லறத்தின் தன்மானம் என்றால்
அப்பா வீட்டின் அடையாளம் ,

அம்மா ஊட்டுவது அன்பு .
அப்பா காட்டுவது மனத்தெம்பு,

நாளும் பொழுதும் உணவளிப்பவள் அம்மா ,
ஆனால்,
அந்த உணவை சம்பாதித்து தருவது அப்பா ,
என்பதை ஏனோ மறந்து போகிறோம் ,


கல்லில் இடரும் போது
வாயில் வரும் வார்த்தை "அம்மாடியோ "
காரில் விழும்போது
கூவி அழைக்கிறோம் "ஐயோ அப்பா"
ஏனெனில் ,
சின்ன சின்ன துன்பங்களில் தேடுவது
அம்மாவின் - அன்பு
ஆனால் ,

பெரிய துன்பங்களில் துணைநிற்பது
அப்பாவின் ஆதரவு,



அப்பா ஒரு நெடிய ஆலமரம் - அவர்
தரும் குளிர் நிழலே "குடும்பம்"
அனைத்துக்கும் எப்போதும் அடைக்கலம்
அப்பா.............

எழுதியவர் : கவிஸ்ரீகவி (19-Nov-11, 10:41 pm)
Tanglish : appa
பார்வை : 650

மேலே