"கூரை இல்லா வீடு"
கொடுக்குற தெய்வம் கூரையை
பிச்சிக்கொண்டு கொடுக்குமாமே!!!!!
கொடுப்பது உண்மையானால்
எங்களைப்பற்றி சொல்லுங்கள்.......
ஒட்டிப்போன வயித்தோடும்
ஒட்டுபோட்ட துணியுடுத்தி
ஓட்டு ஒன்றைமட்டும் உரிமையோடு பயன்படுத்தி
ஓய்வில்லாம ஒழச்சிகிட்டு
ஒருவேள சோறு திண்ணு
ஒலகத்துக்கே சோறுபோட்டு
ஒரு முழம் கயித்துல தொங்க
ஒரு ரூபா காசு கூட கைவசமில்ல
இப்படி வாழும் எங்களுக்கு
கூட கோபுரம் வேண்டாம்....
எங்கள் தலை எழுத்திற்கு
ஒரு தலைப்பாகை {வீட்டிற்கு கூரை} போதும்...
ஒழுகாத வீடிருந்தால்
ஓராயிரம் ஆண்டு வாழ்வோம்....
இப்படிக்கு.........
கூரையில்லா வீட்டு
குடியானவன் {விவசாயி}