மாற்றங்கள் பிரிவில் தான் சாத்தியம் ..
தாயின் நிழல் பிரிவு
மண வாழ்வை தந்தது..
கணவனின் கண நேர பிரிவு
வருமானம் தந்தது..
குழந்தையின் சில மணி நேர பிரிவு
யதார்த்தம் கற்று தந்தது..
காதலின் கட்டாய பிரிவு
கவிதை தந்தது..
நட்பின் நிரந்தர பிரிவு
அசைபோட நல்ல நியாபகம் தந்தது..
உறவுகளின் சுயநல பிரிவு
வாழ்வை கற்று தந்தது..
பிரிவில் தான் பெறவோ
தரவோ முடியும்
என்றாலும்
மனம் ஒரு போதும்
பிரிவை விரும்புவதில்லை. .!