ஆதரவு தாருங்கள் !!!!!!

அம்மா
அண்ணமிட்டால்
அக்கா
அரவணைத்தாள்
தங்கை நகைத்தாள்
தம்பி அடித்தான்
விழித்து விட்டேன்
விண்மீன்களின் சாரலில்
தேவதைகளின் ஒலியில்-
மெல்ல திறந்தேன்
கல்லடி படுமுன் ஓட
விண்மீன் சாரல் என்
கண்ணீரை மறைக்க
உணர்ந்தேன்
அநாதைக்கு பேருந்து நிலையம்
ஆதரவு அல்ல என்று !!!!!!
ஆதரவு தாருங்கள்!!!!!!!!




(மன்னிக்கவும் அநாதை என்ற சொல்லை உபயோகித்தமைக்கு நண்பர்களே )

எழுதியவர் : ஜெயபால் கணேஷ் (20-Nov-11, 1:31 am)
சேர்த்தது : jayapal ganesh
பார்வை : 285

மேலே