உன் மேல் எனக்கு கோபமடி!


என்னுரே!

உன் மேல் எனக்கு கோபமடி!
காதல் மலர்ந்து!
பூவிழி பூத்து குலுங்கும் நேரத்தில் ,
என் விழிகள் அனுதினமும் காண நீ மறுத்து விட்டாயடி !

இதழோரம் வழியும் உன் சிரிப்பினை ,
என் விழிகள் அனுதினமும் காண நீ மறுத்து விட்டாயடி !

வளையலுக்கு அழகு சேர்க்கும் உன் கைகளை ,
என் விழிகள் அனுதினமும் காண நீ மறுத்து விட்டாயடி !

நம் காதல் அனுபவம் வசந்தம் அடையும் நேரம் ,
என் விழிகள் அனுதினமும் காண நீ மறுத்து விட்டாயடி !

பஞ்சு போன்ற உன் கால்கள் பூமியில் பறப்பதை ,
என் விழிகள் அனுதினமும் காண நீ மறுத்து விட்டாயடி !

விடமாட்டேன் !
மொத்தமாய் வட்டியும் முதலுமாய் திருப்பி
கொடுத்துவிடு இழந்த அனைத்தையும்
"கணவன்" என்ற பெயரில் ..........

எழுதியவர் : silamkanchana (15-Aug-10, 8:34 pm)
சேர்த்தது : Silamkanchana
பார்வை : 603

மேலே