என் ஆருயிர் நண்பனே...

தோழனே...
நம் இருவரின் நட்பையும்
அதன் வழி வந்த அன்பையும்
இன்னும் சிந்திக்கின்றேன்

இந்து சமுத்திரத்தின் முத்துவில்
பிறந்த நானும்
முத்தமிழும் உறைகின்ற மண்ணில்
பிறந்த நீயும்
எழுத்துவின் மூலம் நண்பர்களானோம்
அதுவும் ஒரு "கொசு" வின் மூலம்
நம் நட்பை நெருக்கப்படுதியது
அந்த கொசுவே
"கொசுவே நீ மட்டும் எங்கிருந்தாலும்
நலமாக வாழ்வாயாக"

நண்பா முகம் காணா நட்பு
நம் நட்பு
நீ கருப்ப சிவப்பா
நெட்டையா குட்டையா என
எதுவும் தெரியாது
அதே போல தான்
உனக்கும் என்னை பற்றி எதுவும் தெரியாது...
ஆனால் இவை எல்லாவற்றையும்
தாண்டி நம் நட்பே உயர்ந்து
நிற்கின்றது

நண்பா...
உன் அன்பு அற்புதமானது
நீ என் மீது காட்டும்
அக்கறை அளவிட முடியாதது
"நீ ,வா, போ, லூசு " என அழைத்தாலும்
அதற்கு பின் நீ அனுப்பும் அன்பு மடல்
அதில் கலந்துள்ள நட்பு அக்கறை மட்டும் குறையவில்லை

உன் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நீ
என் மீது வைத்துள்ள
நட்பை உணருகின்றேன்
புதிய உற்சாகம் தன்னம்பிக்கையையும் பெறுகின்றேன்

நண்பா...
வெறும் பாக்கு நீரிணையால்
மட்டுமே பிரிந்திருந்தோம்
ஆனால் நீ உன்
கடைமையை நிறைவேற்ற
கண்டம் தாண்டியே செல்கின்றாய்
சிறிது வருத்தம் தான் நண்பா
வேலைப்பளுவில் என்னையும் நம் நட்பையும்
மறந்து விடாதே

பிரிக்க முடியாத அழகான நட்பு
நம் நட்பு
இறுதிவரை இருப்போம் என்ற
நம்பிக்கையில்
இக்கவிதையை உனக்கு
பரிசளிக்கின்றேன்...

நண்பன்டா....

எழுதியவர் : கவி பித்தன் கயா (21-Nov-11, 2:40 pm)
Tanglish : en aaruyir nanbane
பார்வை : 1834

மேலே