எதுவானாலும் எழுதுங்கள்..
எதுவானாலும் எழுதுங்கள்..
எண்ணங்களை புகுத்தும் வரை எழுதுங்கள்..
எழுத்து தான் சாட்டையடி தருகிறது
சந்தர்ப்பவாத திருடர்களுக்கு..
எழுத்து தான் சாதனையைத் தருகிறது
அண்ணல் வழி வரும் அறப்போராளிகளுக்கு
உரிமை பெற வேண்டியவனின் மௌனங்களை
எழுத்துகள் தான் மொழிப்பெயர்க்கும்..
சொல்ல முடியாத காதலைக்கூட
எழுத்து தான் எடுத்துரைக்கும்..
எழுதாத எண்ணங்கள்
உலகம் அறியாமலே காலாவதியாகும்..
பலவீனமானவனின் எழுத்துகள் கூட
சமுதாயம் மாற்றும் பலம் பெரும்..
உள்ளதை நல்லதை உணரவைப்பதை
உன் உள்ளம் நினைத்ததை..
எதுவானாலும் எழுதுங்கள்..

