thamizh
மெய் எழுத்தை கண்டதும் மெய் சிலிர்கிறது!
உயிர் எழுத்தை கேட்டதும் உயிருக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கிறது!
தமிழே! நீ ஒரு மொழி தானே? உயிரோடு உறவாடுகிராயே!
தமிழே! உன்னோடு ஊடல் கொண்டேன்!
ஊடல் கொண்டதால் உணர்ந்தேன் உன்னோடு காதல் என்று!
தமிழே! வரம் ஒன்று தாராயோ!
மீண்டும் ஒரு முறை உன் மடியில் மழலை பேசிட!
தமிழே! வரம் ஒன்று தாராயோ!
தமிழன் என்ற திமிர் எப்பிறப்பிலும் என்னுடன் பிறக்க!