காதல் வாழ்க.....!

மண்ணிற் பிறந்து
தவழும் போது
மண்ணின் மீது காதல்.

சிறிது வளர்ந்து
சிந்திக்கும்போது
தந்தை மீது காதல்.

நான்கு பேரோடு
பழகும்போது
நண்பன் மீது காதல்.

எண்ணு மெழுத்தும்
கற்கும் போது
ஆசான் மீது காதல்.

கடைக்கண்ணாலே
கவிழ்க்கு மந்த
கன்னியின் மீது காதல்.

கன்னி தந்த,இனிய
கட்டிக்கரும்பாம்
மழலை மீது காதல்.

அன்பு,பாசம்,பக்தி
நேசம், அனைத்துந்தந்த
ஆண்டவன் மீது காதல்.

அதனினும்,அல்லல் பட்டு
நம்மையீன்ற அன்னையின்மீதோ
ஆயுள் முழுக்கக் காதல்,

எனவே,காலமெல்லாம்
காதல் வாழ்க !

எழுதியவர் : இளசை விஜயன் (22-Nov-11, 7:18 pm)
பார்வை : 285

மேலே