அம்மா இங்கே வா வா ..!
நான் பிறக்கும் முன்னரே பிறந்துவிட்ட பசிக்கு தான் முக்கியத்துவம் ,
பசியாற்றி புரிய வைத்தாள் அவள் தான் என் தாயென்று..!
பாசத்தை பணயம் வைத்து பள்ளிக்கு அனுப்பிவிட்டாள்,மதிய உணவு இடைவேளை,
மடித்து வைத்த வயிற்றுக்குள் மரண ஓலம் ,பசி..!
தாமதித்த தாயை திட்டி தீர்த்துவிட்டேன்..!
கண்ணருகே ஏதோ அசைய திடுக்கிட்டு நான் திரும்ப ,
உதட்டில் தெரியாமல் பட்டுவிட்டது தித்திப்பு தோசை..
தெரியாமல் பட்டதென மன்னிப்பு கேட்கும் முன் முந்திக்கொண்டாள், தெரிந்தே தான் ஊட்டினாளாம் நண்பனின் தாய்,
அவள் தாய்மையை புரிய வைத்தாள் , நான் என் தாயை புரிந்து கொண்டேன்..
அம்மா, உன்னை காண அனுமதி வேண்டும்.
அனுமதி கேட்க உரிமையின்றி ,
உருக்கத்துடன் நிற்கிறேன் உயரதிகாரி முன்..!