காத்திருந்தது போதும்,இப்பொழுதே சொல்லி விடு....

ஒரு பூவின் இதழ்களை தொடுவதை போல
என்னை நீ வருடி கொடு
உன் ஸ்பரிசத்திற்காக ஏங்கும்
உனக்கான மலர் இவள் என்பதை நீ அறிவாயா? என் அன்பே!

உனக்கான கவிதைகளில் நான் மூழ்கி இருந்த நேரம்
உன் சுவாசம் என் முச்சு காற்றில் கலந்திட,
என்னென்ன ஆகிறேன் நான்...
எப்படி கூறிட உன்னிடம்...

மனம் கலங்கும் நேரங்களில் - உன்
ஒரு பார்வையில் என் காயங்கள் ஆற்றப்படுவதை
என்னவென கூறுவது....

நீ என் அருகிலிருந்தும்,
என்னை கண்டுகொள்ளாத நேரம்..
தரையில் தவறி விழுந்த மீனாய்
என் மனம் தவிக்குதடா....என் கண்ணே...

அழகாய் கண்சிமிட்டுகிறாய்....
என் அருகில் ஓராயிரம் பட்டாம் பூச்சிகள்...

நீ அழகன் இல்லை,நீ அம்சமானவன் இல்லை,
இருந்தும் என்னை ஏனோ வசியம் செய்கிறாய் நீ...

எந்த ஊரில் மந்திரம் கற்று கொண்டாய்....
என் மனதை கண்களாலே களவாடுவதற்கு....

நீ சொல்லிவிடுவாய் என்ற நம்பிக்கையில் நானும்...
நானே முன் வருவேன் என்று நீயும்
காலம் கடத்துவது போதும் காதலனே....

காத்திருந்தது போதும்,இப்பொழுதே சொல்லி விடு,
உனக்கான என் அனுப்ப படாத அஞ்சல்கள்
உன் பார்வைக்காய் தவமிருகின்றன...
நான் உன் கை சேரும் காலத்திலாவது
அந்த காதல் கவிதைகள் வாசிக்கப்படுவதற்காய்....

எழுதியவர் : சங்கீதா நிதுன் (25-Nov-11, 4:08 pm)
பார்வை : 388

மேலே