சுனாமிப் பேர்அலையை கிழித்த தாயின் ஓலம்
ஓ!!!
போதும் கடவுளே இந்த கொடூரம்
முத்து முத்தாய் எடுக்க முத்துக்குளிக்க
முத்தாய் அள்ளவும் வரம் கொடுத்தாய்
மூழ்கி மூழ்கி களைத்து பொன் எடுக்க
முடிந்தாய் மீனாய் கிடைக்கவும் செய்தாய்
இது வரை எல்லாவறையும் வரமாய் தந்தாய்
அழகாய் தந்தை தாய்போல் காத்து நின்றாய்
எம்மை பொத்தி பொத்தி காத்து
ஏன் இப்பொழுது முழுவதுமாய் அடியோடு
வெறுத்தாய் ...........
முதல் முதலாய் அதி காலையில்
அழுகுரலின் சத்தம் சூரியனை
விழுங்கிய இருளின் கொடூரம்
எத்தகைய கொள்ளிப்பேயாய்
பிணமாய் அள்ளிக்குவித்தாய்
தேடித்தேடி பார்க்கையில்
தெரிந்த முகங்கள் தெரியாத முகங்களும்
தேய்ந்த கிழிந்து இரத்தம் சொட்ட !!!!
உதவிக்கரங்கள் நீட்டிய
எத்தனையோ கைகள்
அமிழ்ந்து அலையில் மூழ்கி இறக்க
உறவினர்களின் அழுகுரல்
பேர் அலையாய் ஆழியை துரத்த
மறுமுனை அடிக்கும் பேர் அலையிலும்
ஓயாத அலைகள்
ஓய்வில்லாத தேடல்கள்
பாதி வாழ்வின் புதையலை
அறியாத குழந்தையும்
மீய்தியாய் கிடந்த பானையில் சோறும்
ஒரே அலையில் கீழும் மேலுமாக
தத்தளித்து செல்ல
கண்ட தாய் !!!!!!!
நிலைகுலைந்து துடித்தாள்
அவளின் இயக்கங்கள்
மரத்தில் தொங்கும் வௌவ்வால் போல
போகாத என் மகனே !!!
போதுமாட அம்மாவின் அணைப்பு
தீராத வேதைனைகள்
என்கண் முன்னே மறுவாய் தர
இந்த இயற்க்கைக்கு
நான் என்ன கொடுமை செய்தேன் !!
ஐயோ ..
என் குழந்தையின் வாயில்
குடித்த பாலும் காயவில்லை
ஐயோ ...விழுகிறதே விழுகிறதே
என் மகனின் வயிலிருந்து ஒரு துளி
என் குருதியில் அன்புகலந்து ஊட்டிய
தாயின் பாசம் !!!
கடலோடு கலக்கிறது இறைவா
இப்பொழுதாவது அறிவாளா
இந்த பூமித்தாய்
இத்தாயின் வலியின் வறுமையை
பூவாய் பிறந்த இந்த பின்ச்சுக்குளந்தை
என் வயிற்றில் பிறந்ததன் கொடூரமோ !!
சேறும் சகதியும் குடித்து இறக்க
இந்த ஆழியின் கனவிலே
எதோ நினைப்பு
நாளை என் மகன் தலைநகரத்தில்
வீடுகடித்தருவன் என !!!
காற்றோடு காற்றாய்
என் பாச வார்த்தை நீராய்
அடித்துச்செல்கிறதே ..........
கண்முன்னே அழிகிறதே
இந்த ஏழ்மையின் உயிர்ப்பு
தலைநகரத்தில் வீடும் வேண்டாம்
இந்த ஆழியில் வரும் சொத்தும் வேண்டாம்
என் வீடிற்பக்கம் வரும் கடல் அலையை
ஆணை போட்டு தடுத்து விடுகிறேன்
கடற் கரையை மட்டும் சொந்தமாக்கி
கொள்கிறேன் !!!
அன்னையே!!!
நீ என் குழந்தையாய் திருப்பி தந்தால்
நண்டுப் பொந்துக்குள்ளும்
உறைவிடம் தேடி
என் மகனை நான் வளர்த்திடுவேன் ..
ஏக்கமாகிறேன் தாய்மையின் உணர்வில் !!!
தேடுகிறேன் கடலில் நீத்தி
அலையாய் மிதக்கும் பிணங்கள்
வரதே வரதே என்று
கெஞ்சி தடுக்கிறது
இருந்தும் என் உணர்வுகள் மகனிடமே!!
போகாதே என் மகனே
என் மார்பு தாய்மையில்
ஏங்கிறது !!!
நீ பருக்கும் நேரம் வந்தால்
நீ இல்லாமலே
கேக்காமல் சொரிகிறது
வனாந்தரமாய் ஏன் கரங்கள்
பற்றுதல் இல்லாமல்
வெறுமையாக ....
துவண்டுபோகிறேன்
இந்த ஆழிக்குள் !!!
என் காண்ணா எங்கே
எங்கே இருக்குறாய்
நீ இன்று !!!!!