போனால் போகட்டும் போடா ! !

போனால் போகட்டும் போடா !
இந்த தேர்தலில் உண்மையாய் ஜெயித்தது யாரடா ?
நின்றது தெரியும் தோற்றேன் முடிவில் நிம்மதி எனக்கே கிடையாது
நின்றவர் எல்லாம் ஜெயித்துவிட்டால் சட்டசபையில் அமர இடமேது ?
தேர்தல் என்பது செலவாகும் வரும் வோட்டுகள் என்பது வரவாகும் இதில் தோல்விகள் என்பது நனவாகும் ! போனால் போகட்டும் போடா !!

வரவுக்கும் செலவுக்கும் வழியைக்கண்டேன் வெற்றிக்கு ஒரு வழியைக்கண்டேனா?
கண்டால் கதறி இப்படி அழுவேனா?
என்னக்கும் மேலே எதிரியடா அவன் நாலும் தெரிந்த ஒருவனடா இதில் ஏமாந்து நின்றவன் நானேயடா ! போனால் போகட்டும் போடா !!!

எழுதியவர் : இராம்ப்ரகாஷ் இராஜன் (30-Nov-11, 7:55 pm)
சேர்த்தது : ramprakashrajan
பார்வை : 225

மேலே