ஒலியில் சிறந்தது.

புணரும் காலைப் பொழுதில்
புன்னகை பூக்கும் மலர்கள் - அதை
முத்தமிடும் முத்து- பனித்துளி பேசும் பாஷை;

சலங்கைக் கட்டி அங்கும் இங்கும் ஆடி வரும் பெண்ணாய்
சல சல வென நதியிடும் சப்தம்;

குழலென்ன யாழென்ன என் குரல் வளமிருக்க
கூகூ என குருங்கர்வத்தினால் குயிலிடும் நாதம்;

மாசறு மேனியான் சின்னஞ்சிறு சிசு
'மா' என அழ
மெய்மரந்தோடும் கால்களைக்கொண்ட
மங்கையின் இதயத் துடிப்போலி;

தாயும் தாய் நாடும் கண்ணென போற்றி
தரையில் உயிருக்காக தத்தளிக்கும் தருணம்
'ஜெய் ஹிந்த்' என்ற நம் படை வீரனின் வீர ஒலி;

இவ்வனைத்தும் காண்கிறேன் நான்
உன் இனிமையான சிரிப்பொலியில்...
குழந்தை
மழலை சிரிப்பொலியில்
மனத்தைக் கவரும் சிரிப்பொலியில் !



எழுதியவர் : Archana (1-Dec-11, 1:26 am)
பார்வை : 208

மேலே