கடவுள் எங்கே?

கடவுள் எங்கே?
ஆன்மீகவாதியைக் கேள்,
விண்வெளியைச் சுட்டுவார்,
கண்ணுக்குத் கடவுள் தெரிவதுண்டோ!
கோவிலைக் காட்டுவார்,
கோவிலில் சிலைகள் மட்டுமே உண்டு;

பூமியில் மனிதரில்
காணாத கடவுளையா
விண்வெளியில், கோவிலில்
காண்போம்!

மாதா, பிதா, குரு தெய்வம்,
அன்பு கொண்டவர் மனத்திலும்
மனிதாபிமானம் உள்ளோரிடமும்
கள்ளமில்லா குழந்தைகளிடமும்
கடவுள் வாழ்கிறார்,
யாவரும் அறிவோம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-11, 2:02 pm)
பார்வை : 516

மேலே