பெண்களை கவனித்துக் கொள்ளுங்கள்
ஆண்களே!
காதலுக்கு மட்டும் பெண்களல்ல,
உங்கள் நல்வாழ்வுக்கும் அவளே;
வீட்டு வேலைக்கு மட்டும் பெண்களல்ல,
உங்கள் வம்ச விருத்திக்கும் அவளே;
பிள்ளைகள் பெற மட்டும் பெண்களல்ல,
உங்களை ஆணென்றும், நீயே தகப்பனென்றும்
உலகுக்கு அறிவிப்பவள் அவளே;
பெண்களைப் போற்று,
உன் பாட்டியைப் போற்று,
உன் தாயைப் போற்று,
உன் மனைவியைப் போற்று;
உன் மகளைப் போற்று,
உன் சகோதரியைப் போற்று,
பெண் குலத்தைப் போற்று,
பெண்களை கவனித்துக் கொள்ளுங்கள்.