நான் கண்டு ரசித்த இயற்கை...

அழகான மாலை நேரம்
அந்தி சாயும் வேளை
இனிமையாக வீசும் தென்றல்
செவ்வானத்துடன் கூடிய அழகிய மேகம்
பூமியை தொட்டுவிடத் துடிக்கும் மழை மேகம்
அமைதியான சூழ்நிலை
எதையும் பொருட்படுத்தாமல் ஓடும் காலம்
இவையனைத்தும்...
துயில் கொண்டு எழுந்த
என் கண்கள் கண்ட இனிமையான காட்சி
இவற்றையெல்லாம்...
கையில் சூடான பசும்பாலுடன்
அழகாக ரசிக்கத் தோன்றுகிறது
அமைதியான மனதில்
எவ்வித எண்ணமும் இல்லாமல் ...

எழுதியவர் : -நிலா தோழி ... (7-Dec-11, 2:02 pm)
பார்வை : 490

மேலே