மாற்றான் தோட்டத்து மல்லிகை

பள்ளி பருவத்திலிருந்து பார்த்து பார்த்து
பழகிய நாட்கள் படர்ந்து கிடந்தது பசுமரத்தாணி போல..
காதத் தூரம் சென்று கடைக்கு போக சொன்ன அம்மாவை திட்டிவிட்டு..
கால் கடுக்க அவளுக்காக காத்திருந்த நாட்கள்
கண் முன்னே வந்துபோனது....
இவ்வுலகம் அழிந்தாலும் நீ எவ்வுலகம் சென்றாலும்
உனக்காக வந்துன்னை நான் அடைவேன் என்று
அன்று அவள் சொன்ன வார்த்தைகள்
வந்து என் நெஞ்சை அடைத்தது...
நம் வாழ்கைக்காக என்று எண்ணி..
வெகு தூரம் நான் சென்றுவிட்டேன் உடலளவில்..
என் மனதை அவளிடம் முழுவதுமாய் கொடுத்துவிட்டு..
இன்று பார்த்து மனம் உடைந்தேன்...
என் வீட்டு மல்லிகை இன்று மாற்றான் தோட்டத்தில்
மலர்ந்தபடியே சென்றது இன்னொருவனை கட்டிக்கொண்டு..
"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு..."..
என்று அண்ணா..! சொன்னது நினைவுக்கு வந்தது...
"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு...". ஆனால்
மானம் உண்டா..??? என்று புலம்பி கொண்டே சென்றேன்..
மதுக்கடைக்கு .... எனை மறவா..! கட்டி கொண்ட என் நண்பனோடு....!!!