எஞ்சிய சொர்க்கம்

உயிரின் தீபம் ஏற்றிய சுடரே
சிந்தும் ஒளி உந்தன் உயிரே!
என்னை வரைந்த ஓவியக் கண்ணே
கால மழையில் கரைந்தது என்ன?
என் மனம் கொண்ட மஞ்சள் மலரே
உன் மணம் இன்று மாறியதென்ன?
இதயத்துடிப்பில் வாழும் இசையே
நீயின்றி என் கீதம் வாழுமோ?
கண்கள் தேடிய காவிய உருவே
உன் நினைவு மட்டுமே வாழ்வின் மீதமோ?

எழுதியவர் : பூங்குழலி (15-Dec-11, 10:26 am)
பார்வை : 405

மேலே