எதிர்கால துளிர் ...

சற்றேறக்குறைய
எல்லாம் முடிந்தது
என தீர்மானித்த
வேளையில் சட்டென
மேலிருந்து விழுந்த
இலை மீதேறி
கரை வந்து
பிழைத்தது எறும்பு...
வாழ்க்கையும் அப்படியே
எல்லாம் முடிந்தது
என்றெண்ணி கைவிட
நினைக்கும் நேரத்தில்
ஏதோ ஒன்றினால்
பிடிப்புண்டாகி வாழ்க்கை
ஓடிக் கொண்டிருக்கிறது
எதிர்காலம் நோக்கி...

எழுதியவர் : நிலா தமிழன் (16-Dec-11, 12:46 am)
பார்வை : 572

மேலே