தொடரும் தொலைதல் ...

நீளும் தொலைந்து
போனவைகளின் பட்டியலை
அடிக்கடி என் கண்கள்
மேய்கிறது தானாய்...
தொலைந்த பட்டியலில்
இருந்து மீண்டும்
என்னிடம் மீண்டதை
மீண்டுமாய் தேடி...
தேடல் தோற்று
புதிதாய் ஒன்று
தொலைந்து பட்டியலின்
நீளத்தை அதிகரிக்கிறது...

எழுதியவர் : நிலா தமிழன் (16-Dec-11, 12:52 am)
பார்வை : 479

மேலே