VYC க்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்............
அன்புள்ள VYC க்கு எனது பிறந்தநாள் வாழ்துக்கள் .
நீ பிறந்து 730 விடியல்களை கடந்துவிட்டாய்
நான் உன்னை அடைந்து 455 விடியல்களை கடந்துவிட்டேன் ...
நான் தவறவிட்ட 275 விடியல்களை பற்றி கவலைப்படவில்லை ...
காரணம் ...நீ எனக்கு கொடுத்த அனுபவங்கள்
நாங்கள் பக்குவப்பட உன் மடியினை தந்தாய்
ஒரு தாயானாய் ...
நீ வளர எங்களின் உழைப்பை தந்தோம்
ஒரு குழந்தையானாய்...
நாங்கள் வளர உன் கரங்களை பற்றினோம்
ஒரு தந்தையானாய்....
ஒருநாளில் உன் நினைவில்லை யென்றால் தூக்கம் ஏது?
வாரத்தில் ஒருமுறை உன் கடமைகளை செய்யாவிட்டால் கனவுகள் ஏது ?
மாதம் ஒருமுறை உன் சேவையை செய்யாவிட்டால் நிம்மதி ஏது ?
வருஷத்தில் ஒருமுறை உன்னை வாழ்த்தாவிட்டால் இந்த வாழ்க்கை எதற்கு ?