குன்றேனே நிமிந்து நில்

இளைஞனே !

கனவு காண !
கனவிலும் காரியம் பலித்திட காண!!

நினைவுகள் நிமித்தம்
உன் உயர்வை பற்றி யோசி !

ஊன் உறக்கம் மற!
உறவை வெறுத்திடு !
இதயம் இருப்பதை மறந்திடு !!

முடியும் என்றால்
இதயத்தை தனியே எடுத்து
இன்னொரு பக்கமாய் வைத்து விடு!!

மூளைக்கு வேலை கொடு !!
முயற்சி செய் !!
எழுந்து நில் துணிந்து நட !!
எழுச்சி கொள் !!!
கண்களை மூடாதே !!!
தூக்கத்தை தூக்கில் போடு !!!
தூற்றுவோரை தூக்கி ஓரம் போடு !!
கற்றோரை மதி !!
காண்போரை துதி !!
வெற்றி உனதாகும் !!
உலகம் உன் வசமாகும் !!
குறைகள் கூறுவோரை
புறம் தள்ளு !!
குன்ரேனே நிமிந்து நில் !!!!

எழுதியவர் : இளங்கோ.N (20-Dec-11, 10:38 am)
சேர்த்தது : Elango.N
பார்வை : 364

மேலே