யுத்தம் செய்

யுத்தம் செய்
நித்தம் நித்தம்
நல் யுத்தம் செய்

சிந்தை பெற
பித்தம் தெளிய-நல்
யுத்தம் செய்

விந்தை பெற -நல்
யுக்தியுடன்
சித்தம் கலங்க-புது
யுத்தம் செய்

யுத்தம் செய்
யுத்தம் செய்
வீழ்ந்திடாத -இனியும்
வீழ்த்திடாத யுத்தம் செய்

நல் எண்ணங்கொண்டு
வித்திட்ட யுத்தம் செய்
பாரும் விக்கித்து போகும்
புதுயுத்தம் செய்

பிணி வந்தாலும்-தன்
பணியுணர்ந்து
சப்தமில்லா சத்தான
சகாக்களுடன்
யுத்தம் செய்

தாழ்வுமில்லா ஏற்றமுமில்லா
சாதியில்லா மதமுமில்லா
பேதமில்லா பாதகமில்லா
நல்லுலகம் படைக்க
யுத்தம் செய் நல் யுத்தம் செய்

வீழ்வது நாமாயினும் எழுவது
புது இனமாகட்டும் அதுவும்
நம் மினமாகட்டும்
யுத்தம் செய் - நல்
யுத்தம் செய்

***இவன் ***
பிரகாஷ்சோனா

எழுதியவர் : பிரகாஷ்சோனா (21-Dec-11, 3:07 pm)
சேர்த்தது : prakash sona
பார்வை : 419

மேலே