HONEY
பூப் பூவாய் போய் வண்டுகள் படுத்து
பூவி லிருந்தொரு திரவத்தை எடுத்து
தேனாய் மாற்றிட கடும்பணி புரியும்
தேனீக்கள் கஷ்டம் நமக்கெல்லாம் தெரியும்
தேனீக் களுக்கிது தேவையே இல்லை - தேன்
தேனாக கிடைப்பதேன் தெரியவே இல்லை
தேனோர் இடத்தில் தானாக ஊறுதே - செந்
தேனேதா னென்று தித்திப்பு கூறுதே
பருத்த்தியே புடவையாய் காய்த்தது போல - ஒவ்
ஒருத்தியும் சமைந்தே பிறப்பதை போல
தேனாகவே தேன் தேவைக்கு கிடைக்குது - நம்
தேனீக்கள் ஏன் தேவை இல்லாமல் உழைக்குது
தேனீக்கள் பாஷை தெரிந்தவர் இருந்தால் - உடன்
தெரிவித்து விடுங்கள் அவள் முகவரியை
தேனீக்கள் பட்ட துயரெல்லாம் போதும் - அவை
தேடிச் செல்லட்டும் சிறு சொர்க்கபுரியை