அவஸ்தையோ ..அவஸ்தை...

அசோக், கடந்த ஒரு வாராமாய் முயற்சி செய்கிறான், அவனால் முடியவில்லை, எதுக்காக இப்படி நடந்து கொள்கிறாள் என்றே தெரியவில்லை, இன்றைக்கு எப்படியாவது அவளை சமாதானம் செய்து கடந்த ஒரு வார கால ஆசையை பூர்த்தி செய்திட வேண்டுமென மனதில் வைராக்கிரமாய் இருந்தான்.


அன்று வெள்ளிக்கிழமை, அலுவலக வேலையும் அவ்வளவாக இல்லை, எப்பொழுது வீடு சேரலாம், இரவு எப்பொழுது வருமென்று மிக ஆவலாய் எதிர் நோக்கி காத்துக்கொண்டிருந்தான்.


இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு, படுக்கையறை போய் படுத்துக் கொண்டான், அவன் எதிர்பார்த்த நேரமும் நெருங்கியது. பிரியா கிச்சனில் பாத்திரங்களை கழுவி வைக்கும் சத்தம் கேட்டது. பாக்கெட்டை தடவி பார்த்துக் கொண்டு, அது இருப்பதை உறுதி படுத்திக் கொண்டான்.


பிரியா, வேலை எல்லாம் முடித்து, சேலையை அவிழ்த்து, நைட்டிக்கு மாறியிருந்தாள். சேலையை விட இது தான் வசதியானது, மனதிற்குள் நினைத்துக்கொண்டான். வந்தவள் அவனுக்கு முதுகை காட்டியபடி படுத்துக்கொண்டாள்.


அவளுக்கு அவன் மீது இன்னும் கோவம் இருப்பதை உணர்ந்து கொண்டான்.


'பிரி, கொஞ்சம் திரும்பேன்' அவனுக்கு மூடு வரும் சமயம் அப்படி தான் அழைப்பான்.


'எவ்வளவு ஆசையாய் இருக்கேன், கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா'.


'வேண்டாங்க, ஏற்கனவே என்னால் வலி தாங்க முடியவில்லை, அதுவும் மனிதபிமானம் இல்லாம அழுத்தறீங்க, ரொம்ப மோசம் நீங்க'


'இன்னிக்கு அப்படி எல்லாம் ஆகாது, பாரு இந்த லோஷன மேல தடவிக்கிட்டா, வழு வழுப்ப போய்டும் வலியே தெரியாது' என்றபடி பாக்கெட்டில் கையை விட்டான்


'முடியவே முடியாது, என்னால வலி தாங்க முடியலன்னு சொன்னா விடுங்களேன்'


'எனக்கு மட்டும் ஆசை இருக்காதா' கெஞ்சினான்.


'அதுக்கு நான் என பண்ணமுடியும், என்னாலாதான் கொஞ்சம் கூட வலியை பொறுத்துக்க முடியாதுன்னு உங்களுக்கே தெரியுமே'


'அதுக்காக நான் என்னோட ஆசையை எப்படி அடக்கி வைக்க முடியும்,
எல்லாம் போகப் போக சரியாகிவிடும், கொஞ்சம் பொறுத்துக்கோ, வலிக்காம நான் பார்த்துக்கிறேன், நாளைக்கு லீவு தானே மெதுவா எழுந்தா போதும்'


முடிந்தவரை சமாதானம் படுத்த பகீரத பிராயத்தனம் செய்தான்.


'அதெல்லாம் முடியாது, இப்படியே இருந்தீங்க, நான் வெளியே போய் படுத்துக்குவேன்'


என்ன பெண் இவள், கல்யாணமாகி ஒரு மாதம் தான் இருக்கு, அதற்குள் சலித்து கொள்கிறாளே, ஆரம்பத்தில் எல்லாம் அவன் இழுத்த இழுப்புக்கு எல்லாவற்றுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தாள், என்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவே பயப்படுவாள், என்னமாய் பேசுகிறாள் மனதில் நினைத்துக் கொண்டான்.


சரி கொஞ்சம் நேரம் போகட்டும், மெதுவாக காரியத்தை முடித்துவிடலாம் என்று அப்போதைக்கு விட்டு விட்டான்.


சிறிது நேரத்திற்கு பிறகு, அவள் குறட்டை விடும் சத்தம் கேட்டது. மெதுவாக எழுந்து, அவள் மேல் இருந்த போர்வையை விளக்கி, அவள் கால் மேல் இருந்த நைட்டியை மெதுவாக மேலே அகற்றி, கை விரலால் அவள் கால் விரலை தொட்டான் அவ்வளவு தான்....


'வீல்' என்று அவள் போட்ட சத்தம், அந்த அபார்ட்மென்ட்டையே ஒரு உலுககி எடுத்து விட்டது.


'ச்சே' என்ன பெண் இவள், கடந்த வாரம் கால் தடுக்கி, லூசாக இருந்த மெட்டியை தொலைத்து விட்டாள், அதனால் ஆசை ஆசையாய் புதிதாய் ஒரு தங்க மெட்டியை வாங்கி, எப்ப்டியாவது அவள் கால் விரலில் மாட்ட அவன் படும் அவஸ்தை இன்னும் எவ்வளவு நாளைக்கு தொடருமோ, ஆண்டவனை வேண்டியபடி கட்டிலில் படுத்து உறங்கினான்

எழுதியவர் : கலிபா சாஹிப் ( நன்றி திரு ர (23-Dec-11, 9:02 pm)
பார்வை : 715

மேலே