முதல் காதல்

பச்சிளம் குழந்தைக்கு
பசி வந்தது போல,
தெரிந்தும் சொல்ல
முடியாத உணர்வு..........

தூக்கத்தில் கனவு வருவது
இயல்பு........
கனவே தூக்கமாக மாறும்
கனாகாலம்.......

நமக்கு நாமே அழகாக
தோன்றும் மாயத்தோற்றம்
அளிக்கும் மந்திர மாளிகை......

எழுதியவர் : குமார் அண்ணாமலை (5-Jan-12, 8:42 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 295

மேலே