சாலை நெரிசல்....
காலை
இல்லத்தில்
வேலை நெரிசலை
கடந்து
சாலைக்கு வரும் போது
சாலை நெரிசல்....
தொங்கும்
பேருந்தில்
பொங்கும்
மனிதர்கள்....
புள்ளி கணக்கு
மக்கள் தொகைக்கா?
வாகனங்களுக்கா?
அபாய ஒலி எழுப்பும்
ஆம்புலன்ஸ் ஒரு புறம்.....
வாகன ஒலிகளின்
ஓலம் ஒரு புறம்...
தவறாமல் நேரம் தவறி
அலுவலகத்திற்கு செல்பவர்கள் ஒரு புறம்....
வாகனத்தில் அமர்ந்து
வாகனத்தேயே உற்றி பார்க்கும்
பில்லியன் ஓட்டுனர்கள் ஒரு புறம் ....
ஐந்து நிமிட தூரத்தை கடக்க
ஐந்து மணி நேரமானாலும்
அபாரமாய் அமைதி காப்பவர்கள் ஒரு புறம் ...
விதி முறைகளை மாற்ற
முன் வருவோர் இல்லை ...
சாலையின் நிலையை
சீர் செய்ய முன் வருவோரும் இல்லை ...
சாலை நெரிசலின்
சோதனையில்
சாதனை செய்து கொண்டு இருக்கும்
சென்னை வாசிகளே!!!
தொடரட்டும்
உங்கள்
சவாலான சாலை ஓட்டம்..........