நட்பு ஒரு வரம்!

ஒவ்வொரு வாழ்வின் அர்த்தங்களும்
ஒவ்வொரு இலட்சியம் நோக்கியதே...

காலத்தையும் நேரத்தையும்
சாதகமாக்கி சாதித்தவர்கள் சிலர்,
அதையே காரணம் சொல்லி
காணாமல் போனவர்கள் பலர்...!!!
இதில் என் நிலை எதுவோ
இதுவரை நான் அறியேன்...!!!

அவளுக்காய் என் வாழ்வு என்று
வாழ்ந்து,
அதையே சில காரணக்களுக்காக
தொலைத்து,
என் தூக்கத்தை
தூக்க மாத்திரைக்கு
வாடகைக்கு விட்டு,
விடியும் வரை நினைவுகளுடனும்
விடிந்த பின் புலம்பல்களுடனும்
சாவின் எல்லை நோக்கியே
என் இலட்சியமாய்
இருந்த பொழுதுகளில்,
என் கூடவே வந்தவர்கள்
நீங்கள், என் கை விரல்
எண்ணிக்கைக்குரியவர்கள்....!!

அடி வேண்டிய கல் சிற்பம் ஆவது
இயற்கையின் நியதி,
அடி வேண்டிய நான் எழுந்து நின்றது
என் நண்பர்களே உங்கள் உதவி,

நன்றி எனும் சிற்றெரும்பு கொண்டு
உங்கள் சிகரம் தொட
இதுவரை என்னால் முடியவில்லை..

ஆயிரம் ஆயிரம் கருத்துக்கள் சொல்லும்
நம் கருத்து முரண்பாடுகள்,
நாம் நிதானம் இழந்த பொழுதுகளிலும்
எனக்காய் நீங்கள் தேடும்
ஆறுதல் வார்த்தைகள் என
எல்லாமே வேண்டும்,
கடைசி வரை என்கூடவே வேண்டும்....!!!

அற்புதம் இந்த இயற்கை,
ஏனோ தெரியவில்லை
அதற்கு என்னோடு
சற்றும் உடன்பாடில்லை...!!!

பாழாய்ப்போகுமே இந்த இயற்கை,
உங்களை என்னிடமிருந்து
பிரித்துப் பார்க்கவே ஏங்கும்...!!!

காலத்தின் தேவையோ,
அல்லது
என் தலைமயிரின் கீழ் உறங்கும்
விதியின் வேலையோ....,

எம் தூரங்கள் நீண்டாலும்,
ஏன்,
நான் தொலைந்துதான் போனாலும்,

உங்கள் சுவாசம் தொடும் துரத்தில்
நானும்,
என் சுவாசம் சுடும் துரத்தில்
நீங்களும்,
வாழ்ந்து கொண்டே இருப்போம்...!!!!


(இக்கவிதை எனேக்கே என்னை காட்டிக்கொடுத்த நண்பர்களுக்கும்,
எனக்காக பிரார்த்தனை செய்யும் நண்பர்களுக்கும் சமர்ப்பணம்)

இப்படிக்கு
முஸ்தாக் அஹமட்.

எழுதியவர் : முஸ்தாக் அஹமட் (9-Jan-12, 3:50 pm)
பார்வை : 813

மேலே