காலத்தின் கண்ணாமூச்சி...

கவலைகள் ஏதுமின்றி
களித்திருந்ததொரு காலம்.... .

பள்ளியில் விளையாடி
பசிமறந்ததொரு காலம்...

உனக்கென்று நானும்
எனக்கென நீயும் மாறி மாறி
இறைவனிடம் வேண்டிக்கொண்டதொரு காலம்...

நாம் ஆடிய கண்ணாமூச்சியில் அன்று
தொலைந்து போனது காலம்...

இன்று காலம் ஆடிய கண்ணாமூச்சியில்
தொலைந்து போனது நம்நட்பு...

எழுதியவர் : anusha (9-Jan-12, 4:14 pm)
பார்வை : 401

மேலே