-:கர்ம வீரர் காமராசும் சாதி கட்சி தலைவரும்:-

புகழிடம் தேடா பொன்னியின் செல்வர்
பொய்யா மொழி புலவன் கண்ட அரசர்

கர்மம் வித்திட்ட கர்ம வீரர்
காலம் கடந்த தரணியின் மைந்தர்

பசியேய் போக்க படிக்க சொல்லி
பசியாற்றி எழுத்தறிவித்த இறைவன்

வெள்ளாடை மட்டுமல்லாது
வெண் இதயம் படைத்த தூயவர்

கரை வேட்டி கட்டியும்
கறை படியாத கரத்துக்கு சொந்தகாரர்

ஆயிரம் கரம் நீட்டி கறை கொண்டவர் மத்தியில்
அனனையேய் அதட்டிய அறிவழகர்

கரு நிறம் கொண்டாலும்
திரு உள்ளம் படைத்த சிந்தனையாளர்

காமராஜர் ஆட்சி மலர வேண்டும்
எனும் சொல்லுக்கு சொந்தகாரர்

கிங் மேக்கர் என்று பட்டம் பெற்றவர்
ஈழம் கண்ட சோழனுக்கு ஒப்பானவர்

விவசாயத்தின் ஆணி வேர்
கருனைலே அன்னை

இப்படி
பல புகழ் மறைந்திருக்க
சில புகழுரைத்த அடியேனின் கண்ணீர்

எங்கள் அய்யாவை சாதி கட்சி தலைவராக்கியது ...

எழுதியவர் : -jagakutty (11-Jan-12, 8:27 pm)
பார்வை : 367

மேலே