நாட்டை ராக கீர்த்தனை (அம்மா மேல்) mahaa ganapathi varuvaai arulvaai mettu)

பல்லவி
மகா ஜனனி உன் மலர் தாள் பணிந்தேன் (கமகமாக ஐந்து முறைகள் பாடவும்)
மதித்து நாள்தோறும் உந்தனை வாழ்த்தியே.........(மகா)
அனு பல்லவி
மகா மகிமை மிகும் மாதேஸ்வரியே ( ஐந்து முறை)
மகிதலம் எங்கும் உன் அருள் மழைப் பொழிவாய்(மகா)
சரணம்
ஈரேழ் உலகமும் உந்தனைப் போற்றி............
இன்பம் கொண்டே.......அனுதினம் வாழ்த்துமே ........
ஈடு இணையற்ற............இன்னமுதம் நீயே...........
இன்னருள் தந்தே என்றுமே காத்தருள் (மகா.....)