எல்லாம் என் மகளுக்கே...!!!!
தாலாட்டு பாட தானே தங்கம் உன்ன தேடி வந்தேன்.
என் உயிர் உன்னை உறங்க வைக்க நானும் இங்கு ஓடி வந்தேன்.
உன் கன் அசர கண்டதாலே ஆதவனை அடைகி விட்டேன்.
மார்கழி வாடை காற்று உன்ன எழுப்பும் என்று நான் என் உள்ளங்கையில் உன்னை வைத்தேன்.
என் செல்லம் நீ உறங்கிடவே தங்க தொட்டில் ஒன்று செய்ய ஆசை பட்டேன் .
என் மகள் அங்கம் எல்லாம் தங்க என்று அந்த தங்கம் உன்னை தின்றிடும் என்று அஞ்சி தானே நானும் நின்றேன்.
அதனால் என் நெஞ்சிக்குள்ள துளி கட்டி உன்ன உறங்க வெச்சி அழகு பார்த்தேன்.
உன் போர்வைக்குள் கொசு தீண்டும் என்று உன் கொசு வலைக்கு காவல் நின்றேன்.
பஞ்சி மேத்தைக் குட உனக்கு பாரம் என்று,
பகட்டு மலர் மீது உன்னை உறங்க வைத்தேன்.
காரணங்கள் இருக்கும் என்றால் கடல் அலையையும் நிறுத்தி வைப்பேன்..
அந்த கடவுளையும் அடைகி வைப்பேன்..
நீ கவலைகள் இன்றி கண்ணுறங்க என் மகளே...