வானத்தில் உலா வரும் தேவதை!!!....

இரவு நேரத்தில்....
வானத்தில் உலா வரும் தேவதை....
வெண்ணிலவே!!!...
உனையன்றி யாருண்டோ???....

விண்மீன்கள் உன் ஒளியை பிரதிபலிக்க ...
வான்மேகம் அதை தாங்கி உலாவர...
சூரியனும் உன்னைக்கண்டு காதல் கொள்ளும்!!!...

ஒரு வார்த்தை சரியென்று
நீ சொன்னால்...
சூரியன் உன்னை மணம் முடிக்கும் !!!...

வானத்து தேவர்கள் உன்னை வாழ்த்த...
மின்னல் ஒளியை உன்விரல் மோதிரமாய் மாற்றி...
இடி இடித்து மேல தாளங்கள் முழங்க...
தன் வாழ்த்தை மழைத்துளியாய் பொழிவர்...

-நிலா தோழி...

எழுதியவர் : நிலா தோழி.... (20-Jan-12, 1:20 pm)
பார்வை : 420

மேலே