வரதட்சணை வேண்டாமே!!!...
வரமாய் வரப்போகும் பெண்ணிடம்...
வண்டி வண்டியாய் பொருள் கேட்க வேண்டாமே!!!!...
குல விளக்காய் விளங்கப்போகும்
உன் குலமங்கையிடம்
குலை குலையாய் நகை கேட்க வேண்டாமே!!!...
சித்திரமாய் சிரிப்பார் காந்தி...
அவரை கட்டு கட்டாய் கேட்டு
காயப்படுத்த வேணாமே!!!...
உன்னை கண்ணும் கருத்துமாய்
காக்க வரும் பெண் மலரை...
வரதட்சணை என்ற கத்தி கொண்டு
அவள் மனதினை வெட்டி பாழ்படுத்த வேணாமே!!!...
-நிலா தோழி....