நல்லாங்கு வாழ

நல்லாங்கு வாழ….

‘அ’ னா என்றால் அன்பு.
‘ஆ’ வன்னா என்றால் ஆதரவு.
‘இ’ னா என்றால் இசைவு.
‘ஈ’ யன்னா தானே ஈசனுக்கு.

அறிவு மண்ணும் தமிழையூட்டு!
அமைதி நண்ணும் அன்பைக்காட்டு!
அடக்க எண்ணும் நட்பையோட்டு!
இணங்கி வாழும் தகைமையூட்டு!

கனிவில் முனிவில் இன்மொழியும்,
கருவாய் தன்னம்பிக்கையும் நாட்டு!
கண்ணியம் பேணும் கருத்தை நீட்டு!
கலைகளை உன்னுள்ளே நுழைய விடு!.

தொல்லுலகில் பக்திநெறி அருங்கலம்.
வல்லுலகில் கடமைநெறி பெருங்கலம்.
நல்லுலகில் எல்லவனாய் செல்வாக்குடன்
பல்லாண்டு நல்வாங்கு வாழ்ந்திடு!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-7-1999.

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம். (20-Jan-12, 1:23 pm)
பார்வை : 315

மேலே