காட்டுக் கழுதை

கானகத்தே கழுதையொன்று
துள்ளி விளையாடி
மேடு பள்ளம் தாண்டி
குதித்து கும்மாளமிட்டு
கண்ணில் கண்ட காய்
கனிகளை கடித்து துப்பி
காற்றாட்டில் படுத்து உருண்டு
சுற்றத்தாருடன் கூடி குலாவி
சுதந்திரமாய் வாழ்ந்து வந்தது
முன்பிறப்பின் பயனோ
என்னவோ வண்ணான்
ஒருவனிடம் வசமாய்
மாட்டிக்கொண்டது
உருண்டு பார்த்தது முரண்டு பிடித்தது
மூலையில் கட்டினான் கயிற்றில்
சட்டியில் கஞ்சியும்
தொட்டியில் அக்கஞ்சியின்
தண்ணீரையும் பார்த்தவுடன்
கண்களில் கண்ணீர் வந்தது
இறுதியில் வேறு வழியில்லாமல்
வண்ணானின் வழிக்கு வந்தது
கரை படிந்த மனிதர்களின் அழுக்கு
படிந்த துணிகளை சுமந்தது
நகர வாழ்கையும் நகர
தொடங்கியது நரகமாய்
மெல்ல அசைபோட்டது
உணவையும் உலக நடப்பையும்
குனிந்த முதுகும் நிமிர்ந்தது
சுதந்திர காட்டில் சுதந்திர
மனிதனாய் வாழ்ந்தபோது
நாகரிகமும் வளர்ந்தது
நிமிர்ந்த முதுகும் வளைந்தது
சுமை தாங்கியான மனிதர்களை
நினைத்து தன்னிலை மறந்தது
மனதில் சுமைகள் பொதிந்து
முதுகில் பொதியினை சுமந்து
குடும்ப வாழ்கையை சுமக்கும்
மனிதனின் நிலை நிலையில்லாதது
மாலையை கழுத்தில் சுமந்தவுடன்
மார்பில் கணவனை சுமந்து பின்
கருவில் சுமக்க தொடங்கி
கல்லறை வரை சுமையாகவும்
சுமைதாங்கியாகவும் உள்ள
மனிதன் கழுதையை விட
கவலை கொள்ளதக்கவன்
சிலருக்கு சுமைகளே சுகங்களாகவும்
பலருக்கு அந்த சுகங்களே
சுமைகளாகவும் உள்ளது

எழுதியவர் : செல்வகுமார்.E (21-Jan-12, 2:58 pm)
சேர்த்தது : Pugazhnthi
பார்வை : 229

மேலே